Lankamuslim.org

சாய்ந்தமருது உணவகங்கள், கடைகளுக்கு தரச்சான்றிதழ்

leave a comment »

கல்முனை செய்தியாளர் : சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேசத்தின் வழங்கும் நிகழ்வு இன்று (29) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி சக்கிலா இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர தலைவர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி ஆகியோரும் மற்றும் விசேட அதிதிகளாக சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டப்ளியு.எம். சமீம், வைத்திய அதிகாரி ஏ. இஸ்ஸடீன் மற்றும் கல்முனைப் பிராந்திய உணவு, மருந்து பரிசோதகர் எஸ். தஸ்தகீர் உட்பட பொது சுகாதார பரிசோதகாகளும் சாய்ந்தமருது பிரதேசத்தின் உணவகங்கள், கடைகளின் உரிமையாளா;களும் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதி கல்முனை மாநகர தலைவர் ஸிராஸ் மீராசாஹிப் இங்கு உரையாற்றும்போது,

சாய்ந்தமருது பிரதேசத்தின் சுகாதார தேவைகளை இனம்கண்டு மிக சிறப்பாக கல்முனை மாநகர சபை செயலாற்றி வருகின்றது. அந்த அடிப்படையில் முழு கல்முனைப் பிரதேசத்திற்கும் சுகாதார துறைக்காக முன்பை விட இனிவரும் காலங்களில் சுமார் 70 இலட்சம் ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம். இதனூடாக எமது பிரதேசத்தின் சுகாதாரத்துறை மேம்பாடு காணும் என நம்புகின்றேன்.

எமது சாய்ந்தமருது பிரதேசம் சுகாதார வைத்திய அதிகாரி சக்கிலா இஸ்ஸடீன் தலைமையில் உள்ள சுகாதாரத்துறையினரின் அயராத முயற்சியினால் பாரிய அடைவுகளை கண்டு வருவதனை பாராட்டாமல் இருக்க முடியாது. கல்முனை பிரதேசத்தில் உள்ள வைத்தியர்களை நான் எதிர்காலத்தில் இவ்வாறு சிறப்பாக சேவையாற்றுபவர்களை இனம்கண்டு பாராட்டு விழாக்களை நடாத்துவேன். ஓற்றுமையாக நாம் அணைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கு சிறப்பான சேவைகளைச் செய்ய முன்வர வேண்டும் என்று கூறினார்.

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2012 இல் 9:39 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக