Lankamuslim.org

நாட்டின் பள்ளிவாசல்களில் பாதுகாப்பு தரப்பினர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்: JHU

leave a comment »

JHU logo 2_CI நாட்டின் பள்ளிவாசல்களில் புலனாய்வுப் பிரிவினரும் காவல்துறையினரும் படையினரும் சோதனை நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கடசியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசலில் என்ன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன என்ன விடயங்கள் பேசப்படுகின்றன என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த விஹாரைகளில் சோதனை நடத்தப்படுகின்ற போது ஏன் பள்ளிவாசல்களில் சோதனை நடத்தப்பட முடியாது? என கேள்வி எழுப்பியுள்ளார். கடும்போக்குவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்இ மதரசாக்களில் வெளிநாட்டு மத போதகர்கள் எதனைச்சொலல்கின்றாhகள் என்பதனை கண்காணிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்இ சவூதி அரேபியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மத போதகர்கள் கொழும்புஇ புத்தளம்இ பேருவளை மற்றும் வடக்குப் பகுதி பள்ளிவாசல்களில் போதனைகளை செய்து வருகின்றனர். இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய சட்டங்கள் தொடர்பில் விரிவுரைகள் நிகழ்த்தப்படுகின்றன. அரபு மொழிஇ வன்முறைகள் கூட போதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் முஸ்லிம் சிறுவர்கள் அடிப்படைவாத முஸ்லிம் கொள்கைகளை பின்பற்றக்கூடிய அபாய நிலைமை காணப்படுகின்றது. எனவே இஸ்லாமிய பாடசாலைகளில் புகட்டப்பட்டு வரும் விடயங்கள் குறித்து கண்காணிப்பு செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது. முஸ்லிம்கள் நாள் ஒன்றுக்கு ஐந்து தடவை பள்ளியில் கூடி தொழுகை செய்வதாகவும் என்ன விடயங்கள் பேசுகின்றார்கள் என்பது பற்றி கவனிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.-TC

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2014 இல் 5:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக