Lankamuslim.org

பலஸ்தீன அப்பாசுடன் மஹிந்த சந்திப்பு

leave a comment »

Mahinda-Rajapakse-12412அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகரில் நடை­பெற்­று­வரும் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 69 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பலஸ்­தீன ஜனா­தி­பதி மஹ்மூத் அப்­பாஸை நேற்று சந்­தித்து பேச்சு

நடத்­தி­ய­துடன் அந்­நாட்­டுக்­கான ஒரு மில்­லியன் டொலர்கள் நன்­கொ­டை­யையும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளித்­துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பலஸ்­தீ­னத்­துக்­கான இந்த நன்­கொ­டையை அறி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் நியூயோர்க்கில் நேற்று பலஸ்­தீன ஜனா­தி­ப­தியை சந்­தித்­த­போதே இந்த நன்­கொ­டையை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கைய­ளித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் பலஸ்­தீன ஜனா­தி­பதி ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான சந்­திப்­பின்­போது பலஸ்­தீன மக்­களின் தற்­போ­தைய நிலைமை குறித்தும் மேற்­குக்­கரை மற்றும் காஸா பிராந்­தி­யங்­களின் நிலை குறித்தும் விளக்­கி­யுள்ளார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2014 இல் 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக