Lankamuslim.org

அர­சாங்­கத்தில் இருக்கும் முஸ்­லிம்­ கட்­சிகள் இப்­போ­தா­வது மிகச்­ச­ரி­யான முடிவை எடுக்க வேண்டும்: அநு­ர­கு­மார

leave a comment »

anura kumaraநாட்டில் ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யத்தில் சகல தரப்­பி­னரும் செயற்­ப­டு­கின்­றனர். அர­சாங்­கத்­திற்குள் இருப்­ப­வர்­களே சரி­யான சந்­தர்ப்­பத்­தினை எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற நேரத்தில் பல­மான எதி­ர­ணி­யினை உரு­வாக்க வேண்டும்.

பொது எதி­ர­ணி­யொன்­றிற்­கான அடித்­த­ள­மி­டப்­ப­டு­மாயின் எமது ஆத­ர­வினை வழங்­குவோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

அர­சாங்­கத்தில் இருக்கும் முஸ்லிம் கட்­சி­களும் இப்­போது சரி­யான தீர்­மா­னத்தை எடுக்க வேண்டும். மீண்­டு­மொரு வர­லாற்று தவ­றினை முஸ்லிம் தலை­வர்கள் செய்து விட வேண்டாம் என வும் அவர் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது எதி­ர­ணி­யினை உரு­வாக்க வேண்­டு­மெ­னவும் அனைத்து எதிர்க்­கட்­சி­களும் ஒன்­றி­ணைய வேண்­டு­மெ­னவும் அர­சியல் கட்சி தலை­வர்­களும் ஆய்­வா­ளர்­களும் தெரி­வித்து வரு­கின்ற நிலையில் இது தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­ன­ரிடம் வின­விய போதே கட்­சியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்; நாட்டில் கட்­டா­ய­மா­ன­தொரு ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த வேண்­டிய தேவை அனைத்து மக்­க­ளுக்கும் ஏற்­பட்­டுள்­ளது. மூவின மக்­களும் இந்த அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யினை இழந்து விட்­டனர்.

எனவே, இந்த சந்­தர்ப்பம் ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த வேண்­டிய சந்­தர்ப்­ப­மா­கவே நாம் கரு­து­கின்றோம். அதேபோல் பொது வேட்­பாளர் தொடர்­பிலும் ஒரு சிலர் குறிப்­பி­டு­கின்ற போதிலும் அது சாத்­தி­ய­மற்­ற­தா­கவே உள்­ளது. குறிப்­பாக ஐக்­கிய தேசி­யக்­கட்சி தனித்து போட்­டி­யிட தீர்­மா­ன­மெ­டுத்­துள்­ளது. எதிர்க்­கட்­சிகள் தனித்து செயற்­ப­டு­வது ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை.

எனவே, அவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்­பத்தில் நாமும் எமது தனிப்­பட்ட முடி­வு­களை எடுக்க வேண்­டிய நிலைமை ஏற்­படும். எனினும் பொது எதி­ர­ணி­யொன்­றினை ஏற்­ப­டுத்தி ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது வேட்­பா­ளரை நிறுத்­து­வ­தாயின் மக்கள் விடு­தலை முன்­னணி பூரண ஆத­ர­வினை வழங்­கத்­த­யா­ரா­கவே உள்­ளது.

அதேபோல் அர­சாங்­கத்தின் கூட்­டுக்­கட்­சிகள் சிலவும் தற்­போது அர­சாங்­கத்தின் மீதுள்ள நம்­பிக்­கை­யினை இழந்து விட்­டன. குறிப்­பாக அர­சாங்­கத்தில் இருக்கும் முஸ்­லிம்­கட்­சிகள் இப்­போ­தா­வது மிகச்­ச­ரி­யான முடி­வு­களை எடுக்க வேண்டும். இன்று முஸ்லிம் மக்கள் அர­சாங்­கத்தை முற்­றிலும் வெறுக்­கின்­றனர். அதேபோல் முஸ்­லிம்­களின் எதிர்ப்­பினை சம்­பா­தித்­துள்ள அர­சாங்­கத்­திற்குள் முஸ்லிம் கட்­சிகள் இருப்­பதால் ஒரு­போதும் முஸ்­லிம்­களின் ஆத­ர­வினை பெற முடி­யாது. கடந்த ஊவா மாகாண சபைத் தேர்­தலில் முஸ்லிம் தலை­வர்கள் இதனை உணர்ந்­தி­ருப்­பார்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் தலைமைத்துவம் முஸ்லிம் மக்களை ஏமாற்றி விட்டது. அவ்வாறானதொரு வரலாற்று தவறினை மீண்டும் ஒருமுறை இவர்கள் செய்து விடக்கூடாது. எனவே நாட்டை சரியான பாதையில் இட்டு செல்வதற்கான சரியான முடிவுகளை அனைவரும் ஒன்றிணைந்து எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.-வீரகேசரி

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 இல் 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக