Lankamuslim.org

உள்ளநாட்டு பொறிமுறையில் சிறுபான்மையினருக்கு நம்பிக்கை இல்லை என சுட்டிக்காட்டப் பட்டுள்ளது

leave a comment »

USAஇலங்கையில் சிறுபான்மை இனங்கள் உள்ளநாட்டு பொறிமுறையொன்று குறித்து நம்பிக்கை கொண்டிருக்க வில்லை புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு தரப்பில் முழுயைமான மாற்றங்கள் ஏற்படவில்லை அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் சூடான விவாதம்:-

இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்கள் உள்நாட்டு பொறிமுறை ஒன்று குறித்து நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எனவும், புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு தரப்பில் முழுயைமான மாற்றங்கள் ஏற்படவில்லை எனவும் அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க காங்கிரஸ் குழுவின் கூட்டம் செப்டம்பர் 17 ம் திகதி இடம்பெற்றது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெறுவதால் இலங்கையை பொறுத்தவரை இது மிகவும் முக்கியமான மாதம்.

காங்கிரஸ் குழுவின் கூட்டத்தில் இலங்கை: நீதிக்கான தேடல் என்ற ஆவணப்படம் காண்பிக்கப்பட்டதுடன், இலங்கை தொடர்பான இரு நிபுணர்களின் உரையும் இடம்பெற்றது.

இலங்கை தொடர்பான அமெரிக்க ஆலொசனை குழுவில் பணியாற்றும் மிரியம் யங் இலங்கையில் யுத்தத்திற்கு பிந்திய சூழலில் எதிர்கொள்ளப்படும் பல விவகாரங்கள் குறித்து பரந்துபட்ட அளவில் கருத்தை முன்வைத்ததுடன் இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பு முழுமையாக மாறிவிடவில்லை என சுட்டிக்காட்டினார்.

நம்பகத்தன்மை மிக்க பொறுப்புக்கூறும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமான சவாலாக காணப்படப்போகின்றது, யுத்தத்தின்போது என்ன நடைபெற்றது என்பதை அறிந்து கொள்வதற்கு இலங்கை சமூகங்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் அவசியம் என தெரிவித்தார்.

தமிழ் மக்களோ அல்லது முஸ்லீம்களோ உள்நாட்டு பொறிமுறை ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, மேலும் இந்த பொறுப்புக்கூறும் பொறிமுறை பாதிக்கப்பட்டவர்களை மையமாக கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர் இலங்கையில் நீதியை தேடுவதற்காக இதுவரை இத்துணைதூரம் பயணித்துள்ள அமெரிக்கா எதிர்காலத்தில் இன்னமும் நெருக்கமான ஈடுபாட்டை காண்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தொடர்பான தீர்மானம் தெளிவானதாகவும், உறுதியானமொழியில் அமைந்ததாகவும் காணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சாவதேச மனித உரிமைகண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரச்சார இயக்குநர் ஜோன் சிவ்டன் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை எவ்வகையில் தோல்வியை தழுவலாம் என்பதை சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையில் சம்பந்தப்பட்டு உள்ளவர்கள் அதில் நம்பிக்கை இல்லாதவர்களால் அச்சுறுத்தப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.இலங்கை தொடர்பான வலுவான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு காங்கிரஸ் ஓபாமா நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.GTN

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 இல் 10:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக