Lankamuslim.org

பல்கலை கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 100 வீதத்தால் அதிகரிக்ககப் படும்

leave a comment »

peradeniyaஅரச பல்கலைகழகங்களுக்கு இணைத்து கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்த வருடங்களுக்குள் 100 வீதமாக உயர்த்த போவதாக பல்கலைக்கழக கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழங்களுக்கு தற்போது வருடாந்தம் 20 ஆயிரம் மாணவர்கள் இணைத்து கொள்ளப்படுகிறார்கள். இந்த எண்ணிக்கையை படிப்படியாக 40 ஆயிரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொழில் வாய்ப்புகளை பெறக் கூடிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தி, மாணவர்களுக்கான பல்கலைக்கழக வாய்ப்புகள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பாக கலைத்துறை பட்டப்படிப்புக்காக இணைத்து கொள்ளப்பட உள்ள மாணவர்களுக்கு இந்த பாடநெறிகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களின் கல்வி நிலைமை மற்றும் தரத்தை நிர்ணயம் செய்ய விசேட பேரவை அல்லது சபை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 20, 2015 இல் 10:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக