Lankamuslim.org

மாணவன் கைது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை

leave a comment »

missingகொடதேநியாவ பகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுமியின் கொலை சம்பந்தமாக பாடசாலை மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.மாணவர் ஒருவரைக் கைதுசெய்து விளக்க மறியலில் வைத்ததன் மூலம் காவல்துறையினர் சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மகாநாம ஹேவா குற்றம்சாட்டியுள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவனின் செல்போனில் ஆபாசப் படங்கள் இருந்ததாக குற்றம்சாட்டியே காவல்துறையினர் அவரை கைது செய்ததாகக் கூறிய டாக்டர் பிரதிபா மகாநாம ஹேவா, எந்த சந்தேகமுமின்றி இவ்வாறு கைதுசெய்வது இலங்கை அரசியல் யாப்பை மீறும் ஒரு செயலென்று தெரிவித்தார்.

மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச ரீதியில் நாடு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் மேலும் சிக்கல்களை ஏற்படுத்துமென்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தச் சிறுமியின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஆனால், விசாரணைகளின் போது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே சம்பந்தப்பட்ட மாணவனை கைதுசெய்ததாக காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துளளார்.

இந்த மாணவனை ஒரு சந்தேக நபராகவே காவல்துறையினர் கணித்து வருவதாக கூறிய அவர், ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் அவர் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவாறென்றும் கூறினார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 இல் 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக