Lankamuslim.org

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக மக்களை தெளிவு படுத்த விசேட குழு

leave a comment »

raciநாட்டில் இனவாதத்தை தூண்டி பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்புகளுக்கு எதிராக மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது

இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை விசாரணை அறிக்கை மற்றும் தீர்மானம் தொடர்பில் சில தரப்பினர் இவ்வாறு இனவாதத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறானவர்கள் பற்றி மக்களை தெளிவு படுத்தும் நோக்கில் சிவில் அமைப்புக்கள் அரசியல்வாதிகள் இணைந்து குழுவொன்றை நியமித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிவில் அமைப்புக்களுடன் நடத்திய சந்திப்பின் போது இந்தக் குழு நிறுவப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, மனோ கணேசன் ஆகியோர் இந்தக்குழுவில் அங்கம் வகிகின்றனர். சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பிரிடோ பெர்னாண்டோ, சமன் ரத்னப்பிரிய, பேராசிரியர் சரத் விஜேசூரிய ஆகியோர் உள்ளிட்ட மொத்தமாக பதினைந்து பேர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2015 இல் 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக