Lankamuslim.org

நடைமுறையில் முஸ்லிம் மீள் குடியேற்றம் நடைபெறுகின்றதா ?

with 2 comments

யாழ்ப்பாணத்தில் இருந்து  புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களில்  650 வரையான  குடும்பங்கள் தம்மை யாழ்பாணத்தில் குடியேற்றுமாறு கூறி அதற்குரிய ஆவணங்களில் பதிவுகளை மேற்கொண்டுள்ளது  என்றும்  இருப்பினும் யாழ்ப்பாணம்  வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தேவையான பதிவுகளை மேற்கொண்ட பின்னர் திரும்பி சென்றுள்ளதாகவும் எமது யாழ்ப்பாண செய்தியாளர் lankamuslim.org க்கு தெரிவிக்கின்றார்.

அதேவேளை மன்னார் தாராபுரம் மற்றும் தலைமன்னார்  ஆகிய இரண்டு கிராமங்களிலும் 1090 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்ய அழைத்து வரப்பட்டுள்ளதாக வர்த்தக கைத்தொழில் துறை அமைச்சார் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார் கடந்த 1990 ஆம் ஆண்டு புலி பயங்கரவாதத்தால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இவர்கள்    கற்பிட்டி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்  இவர்களில் ஒரு பகுதியினர்   இவ்வாறு கடந்த வாரங்களாக அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று எமது மன்னார் செய்தியாளர்  lankamuslim.orgக்கு தெரிவிக்கின்றார் விரிவாக பார்க்க

மீள் குடியேறச்  செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் தாம் தங்குவதற்கும் வாழ்வதற்கும்  அங்கு போதுமான ஏற்பாடுகள் இல்லாமையால் இரண்டு மூன்று நாட்களில் திரும்பிவருகின்றனர் என்று அங்கு இருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டாலும் நடைமுறை   வேறாக இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்

Written by lankamuslim

திசெம்பர் 19, 2010 இல் 9:05 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. முஸ்லிம் தலைமைத்துவம் இந்த நேரத்தில் அக்கறையோடு செயற்படுவது நல்லது

    mohamed azath

    திசெம்பர் 19, 2010 at 11:50 பிப

  2. it is unplanned strategy. We can not call this effort as resettlement. Rather we can call this another forcible eviction. Because in 1990 when these Muslims were expelled from their homeland they came empty hand and without a shelter house in other parts of the country like Puttalam, Ikkirikollawa and Negombo. In the same manner in 2010 these Muslims were broght forcible to their original homeland where there is no shelter house. Furthermore there is no muslims in these areas to provide free food for the returnees. So this is another blunder. The administration should construct the houses first then they should bring in people.

    mohamed Jansin

    திசெம்பர் 20, 2010 at 12:43 பிப


பின்னூட்டமொன்றை இடுக