Lankamuslim.org

சிறுபான்மை இன முஸ்லிம்களின் அரசியல் வழிகாட்டி அல்லாமா இக்பால்:ரவூப் ஹக்கீம்

with 2 comments

பாகிஸ்தானின் பெரும் கவிஞரும், சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளருமான அல்லாமா இக்பாலின் நினைவு தின வைபவம் அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிலையத்தில் இடம்பெற்றது. அல்லாமா இக்பால் கவிஞராக மட்டும் பெரும்பாலானவர்களால் அறியப்பட்டாலும் அவர் மிகவும் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர் என்பது பலரும் அறியாத விடையம் பாகிஸ்தான், இலங்கை நட்புறவுச் சங்கம் இந்த வைபவத்தை ஏற்பாடு செய்தது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்  தெரிவித்ததாவது,

பாகிஸ்தான் சிந்தனையாளர் அல்லாமா இக்பாலின் பெருமைகள் இந்தியா, இலங்கை, மலேஷியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களிடையே நீங்கா நினைவுகளாக உள்ளன. அன்னாரின் அரசியல், இலக்கிய வழிகாட்டல்கள் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களுக்கு சிறந்த முன்மாதிரி

கிழக்கு மாகாணத்தில் அல்லாமா இக்பாலின் பெயர்சூட்டப்பட்டுள்ள கிராமங்கள் ஏராளமுள்ளன. இன்னும் அவருடைய கவிதைகளை தமிழில் தொகுத்த கவிஞர்களும் எமது நாட்டிலுள்ளனர்.

இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் அல்லாமா இக்பாலின் அரசியல் அணுகுமுறைகளையும் கடைப் பிடிக்க எண்ணியுள்ளது. இந்தியாவிலே சிறுபான்மையினராக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் இதுவே பொருத்தமான வழி யென்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

இது அவரின் பெருமையையும் புகழையும் சுட்டிக் காட்டுகின்றது. பெரும்பான்மையினருக்குள் சிறுபான்மையினராக வாழ்கின்ற முஸ்லிம்களின் உள்ளக்கிடக்கைகளை அல்லாமா இக்பால் கவிதைகளூடாக வெளிக்காட்டியுள்ளவிதம் வியக்கத்தக்கது.

உலகில் 45 வீதமான முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இன்றைய காலத்தில் பெரும்பான்மையினருடனான புரிந்துணர்வுக்கு அல்லாமா இக்பாலின் சிந்தனைகள் வழிகோலுவதாக மு. காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தான் றோயல் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் அல்லாமா இக்பாலின் கவிதைப் போட்டிக்கான பரிசை அப்போதைய பிரதமர் சிறிமா பண்டாரநாயகா விடமிருந்து பெற்றுக்கொண்டதையும் அமைச்சர் நினைவூட்டியுள்ளார்

Written by lankamuslim

திசெம்பர் 20, 2010 இல் 9:51 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. “The Democratic system of the West is the same old instrument

    Whose chords contain no note other than the voice of the Kaiser,

    The Demon of Despotism is dancing in his democratic robes

    Yet you consider it to be the Nilam Pari of liberty”

    allama Iqbal

    திசெம்பர் 20, 2010 at 4:26 பிப

  2. தற்போது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு யார் வழிகாட்டி????????????????

    mohamed azath

    திசெம்பர் 20, 2010 at 8:08 பிப


பின்னூட்டமொன்றை இடுக