Lankamuslim.org

அஷ்ரப் நகர முஸ்லிம்களின் காணி அனுமதி ரத்து திட்டமிட்ட இனத்துவேசச் செயல்:தவிசாளர் அன்சில்

with one comment

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப்நகர் பிரதேசத்தில் குடியிருக்கும் 31 பொதுமக்களை அவர்களின் 66 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர,இரு வாரங்களுக்கு முன்னர்  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அஷ்ரப் நகரைச் சேர்ந்த  பொதுமக்கள் தமது காணிகளுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரத்தினைப் புதுப்பிக்கவில்லை என்றும், அதன் காரணமாக – இவர்களின் காணி உத்தரவுப் பத்திரம் வலுவிழந்து போயுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது விரிவாக பார்க்க

மேற்படி காணிகளுக்கான அனுமதிப் பத்திரத்திரங்கள் 1980ஆம் ஆண்டு இறுதியாகப் புதுப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது இது இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ள விடையம்  இந்த நிலையில் தமிழ் மிரர் இணையம் இன்று பதிவு செய்துள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

அஷ்ரப் நகரில் உள்ள முஸ்லிம் மக்களின் காணிகளின் அனுமதிப் பத்திரத்தினை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ரத்துச் செய்திருப்பது இனவாதச் செயலாகும் என்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தெரிவித்துள்ளார்

அஷ்ரப் நகர மக்களின் காணிகளைப் போல் தீகவாபியிலுள்ள 184 சிங்களவர்களிடமும் 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படாத காணி அனுமதிப் பத்திரங்கள் உள்ளன.

அப்படியென்றால், அஷ்ரப் நகர மக்களின் காணி அனுமதியை ரத்துச் செய்துள்ளமை போல், தீகவாபியிலுள்ளவர்களின் அனுமதிப் பத்திரங்களையும் இதேகாலத்தில் அரசாங்க அதிபர் ரத்துச் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

‘அஷ்ரப் நகரத்திலே வாழுகின்ற மக்கள் பாமர மக்கள். யுத்த சூழ்நிலை மற்றும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக அந்த மக்களால் தமது காணிகளுக்குரிய அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்க முடியாமல் போய் விட்டது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால், இந்த மக்களில் 31 பேருடைய காணி அனுமதிப்பத்திரங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இந்த விடயத்தில் அரசாங்க அதிபர் தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார். பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டதன் பிறகு பிரதேச செயலாளர் அல்லது காணி ஆணையாரால் மட்டுமே இவ்வாறு அனுமதிப் பத்திரங்களை ரத்துச் செய்ய முடியும்.

அந்த வகையில், அம்பாறை மாவட்ட அரசாங் அதிபர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதோடு, தன்னுடைய இனவாத முகத்தினையும் இவ்விடயத்தில் காட்டியிக்கின்றார்.

இவ்வாறு காணி அனுமதிப்பத்திரத்தினை அரசாங்க அதிபர் ரத்துச் செய்ய வேண்டுமாக இருந்தால் கூட, அஷ்ரப் நகரில் உள்ள காணிகளைப் போல், தீகவாபியிலுள்ள 184 சிங்களவர்களிடமும் 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படாத காணி அனுமதிப் பத்திரங்கள் உள்ளன.

அப்படியென்றால், அஷ்ரப் நகர மக்களின் காணி அனுமதியை ரத்துச் செய்துள்ளமை போல், தீகவாபியிலுள்ளவர்களின் அனுமதிப் பத்திரங்களையும் இதே காலத்தில் அரசாங்க அதிபர் ரத்துச் செய்திருக்க வேண்டும்.

அவ்வாறில்லாமல், முஸ்லிம் மக்களின் காணிகளினுடைய அனுமதிப் பத்திரங்களை மட்டும் தெரிவு செய்து ரத்துச் செய்திருப்பதை இனத் துவேசச் செயலாகவே எம்மால் பார்க்க முடிகிறது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் இந்தச் செயலானது திட்டமிட்ட இனத்துவேசச் செயல் என்பதைத் தவிர வேறு எதனையும் என்னால் கூற முடியாது’ என்றார்.

Written by lankamuslim

திசெம்பர் 20, 2010 இல் 6:41 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. மக்கள் பிரதிநிதிகள் எங்கே ?

    abdulla1

    திசெம்பர் 21, 2010 at 11:17 பிப


பின்னூட்டமொன்றை இடுக