Lankamuslim.org

முஸ்லிம் என்பது விட்டுகொடுக்க முடியாத எமது அடையாளம்

with 8 comments

M.ஷாமில் முஹம்மட்

இருப்பு  சிந்தனையை தீர்மானிக்கிறது இருப்பு என்பது புறச்சுழல் சிந்தனை என்பது அகச்சூழல் . ஒரு முஸ்லிமை பொருத்தவரை சிந்தனைதான் இருப்பை தீர்மானிக்க வேண்டும் ஒரு முஸ்லிம் விவசாயியாகவும் தொழிலாளியாகவும் முதலாளியாகவும் மத்தியதர உயர்தர  வர்க்கத்தவனாகவும் இருகிறான் இது வர்க்க அடையாளம் , ஒரு முஸ்லிம் வடக்கு சார்ந்தவனாக கிழக்கு சார்ந்தவனாக இருகிறான் இது பிரதேச அடையாளம், ஒரு முஸ்லிம் ஆணாகவோ பெண்ணாகவோ இருகிறான் இது பாலியல் அடையாளம் ஒரு குடும்பதுக்குள் தந்தையாக, தாயாக, மகனாக இருகிறான் இது உறவு முறை அடையாளம் .

இந்த அடையாளங்களைப்   போன்ற ஒரு அடையாளம்தான் மொழி அடையாளம் மொழி ரீதியாக தமிழ் பேசுபவானாக, சிங்களம் பேசுபவானாக, அரபு பேசுபவானாக, சீன மொழி பேசுபவானாக இருகிறான் இது மொழிஅடையாளம் விரிவாக பார்க்க இந்த அடையாளங்கள் எல்லாம் முஸ்லிம் என்ற சிந்தனை கோட்பாட்டு அடையாளத்தினுள் மிக சிறிய அடையாள அடுக்குகளாக இருக்கிறது இந்த சிறிய அடையாள அடுக்குகளை புறக்கணித்து முஸ்லிம் என்ற அடையாள முத்திரையை ஏற்றுக் கொள்ளவேண்டும். அதுதான்  இஸ்லாமிய சித்தாந்தம் போதிக்கும் அடையாளமாகும்

இந்த அடையாளத்தை அடையாளப்படுத்தும் போதுதான்  இஸ்லாமிய   சித்தாந்தம் வலுவடைகிறது. இந்த அடையாளத்தை கொண்ட  மனிதம் பலம் பெருக்கிறது. முஸ்லிம்மனிதம் பலம் பெரும்போது எமது அடையாளம் தலை நிமிர்த்தும்.  முஸ்லிம் தன்னை எப்போதும் ஒரு முஸ்லிமாக மட்டும்தான் அடையாள படுத்த முடியும் முஸ்லிம் சமூகத்திடம் அதன் அனைத்து அடையாளங்களையும் மீறி நாம் முஸ்லிம் என்ற அடையாளம் வெளிப்பட வேண்டும் , முஸ்லிம் அடையாளம் என்பது  இஸ்லாமிய அரசியல் கோட்பாட்டை  ஏற்று கொண்டவர்களின் அரசியல் அடையாளமாகும் , இஸ்லாம் முஸ்லிம் என்ற கோட்பாட்டு சமுதாய அடயாளத்தை கட்டமைத்து உருவாக்கி எம்மிடம் தந்துள்ளது இந்த அடையாளத்தை பாதுகாப்பது எமது இருப்பை பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். இன்று  பிரதேசவாத சிந்தனைகள் முஸ்லிம் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக  மாறிவருகின்றது இந்த சிந்தனைகள், வாதங்கள் முற்றிலும் இஸ்லாமிய சிந்தனைக் கோட்பாடுகளுக்கு விரோதமானது என்பதுடன் இவற்றை ஆதரிப்பது பெரும் தவறாகும் அதேபோன்று இன அடையாளங்கை முதன்மை படுத்திய அரசியல் ,சமூக நடத்தைகள் இஸ்லாமிய சகோதரத்துவத்தை பிளவு படுத்தும் நிலை ஏற்பட்டால் அது முற்றிலும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு விரோதமானதாகும்

இஸ்லாமியர் என்பதை கூட சரியான அடையாளமாக ஏற்று கொள்ளமுடியாது இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்களை அல் குர்ஆன் இஸ்லாமியூன் – இஸ்லாமியர் என்று அழைக்கவில்லை அதற்கு மாற்றமாக முஸ்லிம் என்று அழைக்குமாறு கற்றுத்தருகின்றது

இந்த அடையாளம்தான் இலங்கையிலும் எமது அடையாளம் இலங்கையில் மூன்று பிரதான இனக் குழுக்கள் வாழ்கின்றன சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்பது இலங்கை இனங்கள் பற்றிய ஆய்வில்  ஏற்றுகொள்ளப்பட்ட   அணுகுமுறையாக இருக்கிறது.  இருப்பினும் இதற்கு சமாந்திரமான வாதங்கள் முன்வைக்கப்படுவதுண்டு இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தமிழ் மொழியை தமது தாய் மொழியாக கொண்டிருப்பதால் சில தமிழ் சிங்கள  ஆய்வாளர்கள் முஸ்லிம்களை தமிழ் இனத்தின் ஊடாக அடையாளப்படுத்த முற்பட்டுள்ளனர் இவர்கள் முஸ்லிம்களை தமிழ் இனத்தின் ஒரு மதப் பிரிவாக காட்ட முனைத்துள்ளனர் எனினும் இந்த முனைப்பு முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்ட முனைப்பாக அமைந்ததுடன் முஸ்லிம்களை தமிழர்களின் ஒரு மதப் பிரிவாக பார்க்கும் அணுகு முறை வளர்ச்சிக்கு முற்றுபுள்ளி வைத்தது.

ஏழாம்   நூற்றாண்டு  முற்பட்ட காலத்தில் இருந்து இலங்கையுடன் அரபிகள் மிக நெருக்கமான வியாபார தொடர்பை பேணி வந்ததுடன் இலங்கையில் வாழ்ந்தும் வந்தனர் இதற்கு சாதகமாக பல சான்றுகள் முன்வைக்கப்படுகின்றது  எனிலும் இஸ்லாமிய கோட்பாடானது ஏழாம்  நுற்றாண்டுக்கு இறுதிப் பகுதியில் இலங்கையில் அறிமுகமானது    ஏற்கனவே    இலங்கையில் வாழ்ந்த அரபிகள் இஸ்லாத்தை ஏற்றதாலும் புதிதாக வந்தவர்கள் இலங்கை பெண்களை திருமணம் முடித்ததாலும் இஸ்லாமிய கோட்பாடு இலங்கையில் வேர் ஊன்றியது புதிதாய் ஏழாம் நூற்றான்டில் அறிமுகமான கோட்பாட்டு அரபியருக்கும் சிங்களவருக்கும் தமிழருக்கும் முஸ்லிம் என்ற ஒரு அடையாளத்தை  கொடுத்தது  அதை மட்டும்தான் அது அங்கீகரித்தது மற்றைய அடையாளங்களை அனைத்தையும் அது கழற்றி வீசிவிட்டது.

ஏழாம் நூற்றாண்டில் பின்னர்  சர்வதேச முஸ்லிம்களின் வர்த்தக தொடர்பு இலங்கையுடன் மிகவும் அர்த்த புஷடியுள்ளதாக காணப்பட்டது பல நாடுகளின் இருந்து முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்தனர் சிரியா, மொரோகோ , யெமன் , எதியோபியா , ஈரான் , ஈராக் , மலேசியா இந்தியவின் தமிழ் நாடு , கேரளா,குஜராத் போன்ற நாடுகளில் இருந்து பல மொழி பேசக்கூடிய பல இன மக்கள் வந்தனர் இவர்கள் வியாபார மொழியாக அரபி தான் பேசினார்கள் ஆனால் இவர்கள் அனைவரும் முஸ்லிம் என்ற தமது கோட்பாட்டு அடையாளதை மட்டும் தான்  முதன்மை படுத்தினர் இஸ்லாமிய கோட்பாட்டு தன்னை ஏற்றுகொண்ட பல விதமான இனமக்கள் கூட்டத்தை முஸ்லிம் என்று மட்டும்தான்.

அடையாள படுத்தியது இப்படி தன்னை அடையாளபடுத்திய  கோட்பாட்டு சமுதாயம் பல இன பிரிவுகளின் இரத்த கலப்பாக உருவானது  இது தனி ஒரு இனத்தை பிரதிநிதித்துவ படுத்தவில்லை  சிரியர் , மொரோகர் யெமனிகள், எதியோபியர், ஈரானியர், ஈராக்கியர், மலேசியர், இந்தியர் என்ற இனங்களுடன் சிங்களவர் , தமிழர் என்ற இரத்தங்கள் ஒன்றாக கலந்து முஸ்லிம் என்ற புதிய கோட்பாட்டு அடையாளம்  உருவானது இது பிரிக்க முடியாத இரத்த கலப்பை கொண்டது  இங்கு இனவாதம் இல்லை கோட்பாட்டுவாதம் மட்டும் தான் உண்டு இதுதான் எமது முஸ்லிம் என்ற அடையாளம் ,முஸ்லிம் என்ற அடையாளம் ஒரு சிந்தனை கோட்பாட்டின் பெயர் இந்த  அடையாளத்தினுள் பல நூறு இனங்கள் இருக்கலாம் ஆனால் அவை இந்த சிந்தனைக்  கோட்பாட்டை  ஏற்றுகொண்டவுடன் அனைத்து அடையாளங்களையும் இழந்து விடும் தம்மை முஸ்லிம் என்ற ஒரு அடையாளதால்  மட்டும் அடையாள படுத்தும் .

இந்த அடையாளத்தால்  மட்டும்தான் 1924 ஆண்டு துருகியில்  வீழ்த்தப்பட்ட இஸ்லாமிய கிலாபத்  மீண்டும் உலகில் ஏற்படுத்தபடுவதற்கு அடிப்படையாக அமையும் என்பதுடன் இலங்கை முஸ்லிம்களை சர்வதேச முஸ்லிம் உம்மாவின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நிலைநிறுத்தும்

“முஸ்லிம்” -என்பது விட்டுகொடுக்க முடியாத  எமது  அடையாளம்’ என்ற இந்த கட்டுரை கடந்த வருடம் 13.10.2009 அன்று எமது  lankamuslim.org இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டது மீண்டும் இன்று 23.12.2010 lankamuslim.org இல் மீள் பதிவு செய்யப்படுகின்றது

Written by lankamuslim

திசெம்பர் 23, 2010 இல் 8:11 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

8 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. சகோதரர் சாமில் முஹம்மது அவர்களிடம் ஒரு வேண்டுகோள், “இலங்கை முஸ்லிம்களின் வரலாறு” என்பதை ஒரு தொடர் கட்டுரையாக “லங்கா முஸ்லிம்” மூலம் தருவீர்களானால்,என்னைப் போன்ற பலருக்கு பிரயோசனமாக இருக்கும்.மட்டுமல்ல இது இப்போதைக்கு சாலப் பொருத்தமாகவும் இருக்கும்.

    Sahib

    திசெம்பர் 24, 2010 at 3:13 பிப

    • as/alikum brother “இலங்கை முஸ்லிம்களின் வரலாறு”
      parpathuku “ILANGAI MUSLEEMKALIN THONMAIKANA VARALAARU” endra DR. SHUKRI ELUTHIYA BOOKILL PARKALAM JAZAKALLAH.

      shihar mohammed

      திசெம்பர் 27, 2010 at 9:37 முப

  2. As Muslims, we are an ideological society we are not a ethnic group we oppose to be an ethnic group like Sinhalese and Tamils we are part of world Muslim Ummah lives in Sri lanka loving our country it is our common perception we identify ourself by the strength of our faith, not by our language, race, colour or tribe or whatever else

    well said …அடையாள படுத்தியது இப்படி தன்னை அடையாளபடுத்திய கோட்பாட்டு சமுதாயம் பல இன பிரிவுகளின் இரத்த கலப்பாக உருவானது இது தனி ஒரு இனத்தை பிரதிநிதித்துவ படுத்தவில்லை சிரியர் , மொரோகர் யெமனிகள், எதியோபியர், ஈரானியர், ஈராக்கியர், மலேசியர், இந்தியர் என்ற இனங்களுடன் சிங்களவர் , தமிழர் என்ற இரத்தங்கள் ஒன்றாக கலந்து முஸ்லிம் என்ற புதிய கோட்பாட்டு அடையாளம் உருவானது இது பிரிக்க முடியாத இரத்த கலப்பை கொண்டது இங்கு இனவாதம் இல்லை கோட்பாட்டுவாதம் மட்டும் தான் உண்டு

    Mubark

    திசெம்பர் 24, 2010 at 9:22 பிப

  3. இவ்வாரான கட்டுரையை வெளிநாட்டு ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும்
    சகோதரர் சாமில் முஹம்மட் எழுதவேண்டும்.

    mohamed azath

    திசெம்பர் 24, 2010 at 9:42 பிப

  4. Brother shamil well said , my view about your article : identity, As followers of Islam can not be identified other than Muslim because if we try to identity ourself by other secondary identities such as Tamil Muslim , Sinhala Muslim or Tamil or Sinhala speaking Muslim or identity As moor those identities are not completed identity for example if we have moor as our primary identity then we can not join Muslim new comers who convert from Tamil or Sinhala societies with our Moor identity or other secondary identities As one body ,if we call Muslim as our primary identity then there will be a room for any one to join with us without secondary view as single body .
    Having Muslim identity As our primary one it would be integratived with other Muslims all over the world as ONE UMMAH, in other word having Muslim as primary identity would be one of puzzles which would joint together one day As One Ummah with one Islamic political system InshaAllah
    we can have other minor identities such as moor or Tamil speaking , sinhaka speaking , or malay as secondary identities

    Mazahim Mohamed

    திசெம்பர் 24, 2010 at 10:00 பிப

  5. இன்று உலகம் முழுவதிலும் முஸ்லிம் என்ற அடையாளத்தை சிதைத்து விட பல்வேறு சதிகள் நடைபெறுகின்றது எமது பிரதான அடையாளமாக முஸ்லிம் என்பது இலங்கை முஸ்லிம்களை மட்டும் ஒன்றுமை படுத்தும் ஒன்றல்ல மாறாக உலகில் உள்ள ஒவொரு முஸ்லிம் நபரையும் ஒன்றாக இணைக்கும் அடையாளம் இன்று அமெரிக்கா மற்றும் மேற்கு உலகம் முஸ்லிம் என்ற ஒற்றுமையை சிதைக்க பல சிந்தனை சிதைவுகளை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றது அந்த சிந்தனை சிதைவுகளில் பிரதானமாக இனவாதம் நான் அறபு இனம் நான் பாரசிக இனம் நான் , நீ அஜமி அவன் சியாஹ் நான் சுன்னாஹ் மற்றும் நான் எனது எல்லைக்குள் மாட்டும் சிந்திக்கவேண்டும் போன்ற மேகுலகின் இறக்குமதிகளை பெற்று எமது உம்மாஹ் சிந்தனை சிதைவுகளை சந்தித்து வருகின்றது இந்த சந்தர்பத்தில் இந்த மாதிரியான கட்டுரைகள் மிகவும் அவசியம் நன்றி கட்டுரையாளர் மற்றும் லங்கா முஸ்லிம் இணையன்

    imran

    திசெம்பர் 24, 2010 at 11:00 பிப

  6. Mazahim mohamed- well said I agreed with our comment – ‘Muslim as primary identity would be one of puzzles which would joint together one day As One Ummah with one Islamic political system InshaAllah’

    our primary identity must be Muslim –

    kalam

    திசெம்பர் 25, 2010 at 9:46 முப

  7. IVVARANA KATTURAIHAL AANGILAM SINHALAM PONDRA MOLIHALEELUM PIRASURIKKAPADA VANDUM

    shihar mohammed

    திசெம்பர் 27, 2010 at 9:39 முப


பின்னூட்டமொன்றை இடுக