Lankamuslim.org

ரங்கிரி FM தடை செய்யப்பட வேண்டும் அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

with one comment

F.M.பர்ஹான், அஸ்லம் அலி :தம்புள்ள ரன்கிறி பிரதேசத்தில் அமைந்துள்ள ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் மீது மெற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும்,அவர்களின் தராதரங்களுக்கு அப்பால் சட்ட நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் மதக்கடமைகளுக்கு செல்லவிடாது தடுத்தமை போன்ற ஈனத்தனமான செயல்களால் இலங்கையில் வாழும்,20 இலட்சம் முஸ்லிம்களும் மன உலைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நாட்டில் மதக்கடமைகளை சுதந்திரமாக செய்வதற்கு கூட,பெரும்பான்மை சமூகத்தின் சில கடும் போக்கு சக்திகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேலைத் திட்டங்கள் இத்தோடு முடிவுக்குறியானதாக மாறும் அபாயம் ஏற்படலாம் என தாம் அச்சம் கொள்வதாக அமைச்சர றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே வேளை இந்த பள்ளிவாசல் மீது பௌத்த பிக்குகளால் மேற்கொள்ளப்ட்ட தாக்குதல் சம்பவத்தை ஊடகங்கள் முழு சர்வதேசத்திற்கும் காண்பித்துள்ளன.அதனால் எமது நேச அரபு நாடுகள் இந்த சம்பவம் குறித்து கவலையடைந்துள்ளதாகவும்,தொடர்ந்து இவ்வாறான நிலையேற்படாதிருக்க கடுமையான நடவடிக்கையெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர்வலியுறுத்தியுள்ளார்.

அதே வேளை கடும் போக்கு சிங்கள வானொலியான ரன்கிரி எப்.எம்.அலைவரிசையானது தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத போக்குடன் செயற்படுவதாகவும்,இந்த வானொலியின் அனுமதிப்பத்திரம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன்,ஊடக அமைச்சின் செயலாளர் மற்றும் தொலை தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை ஏற்கனவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த வானொலியின் அனுமதிப்பத்திரத்தை இடை நிறுத்துமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசி மூலம் வேண்டுகோளொன்றையும் முன்வைத்துள்ளைமை குறிப்பிடத்தக்கது என அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 இல் 8:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. welldon mr minister rishard

    aa

    ஏப்ரல் 23, 2012 at 11:50 பிப


பின்னூட்டமொன்றை இடுக