Lankamuslim.org

மதப் பேரினவாத சக்திகள் சற்று பின்வாங்கியுள்ளது

with 21 comments

தம்புள்ள நகரில் இன்று  பிரதேச செயலகத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தமையால் அசம்பாவிதம் இடம்பெறலாம் என்பதால்  பெருந்தொகையான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர் என்று அங்கிருந்து எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது . சுமார் 1500 போலீஸ் மற்றும் அதிரடி படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டிருந்ததாக அந்த தகவல்கள் தெரிவிக்கிறது.

அதேவேளை இன்று தமக்கு சாதகமான தீர்வு கிடைக்கா விட்டால் இன்று பள்ளியை உடைப்போம் என்று தெரிவித்திருந்த இனவாத தரப்பு இன்று மஸ்ஜித் விவகாரம் தொடர்பான  பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது  மஸ்ஜித் 06 மாத காலத்திற்குள் அகற்றப்படல் வேண்டுமென சற்று இரங்கி வந்துள்ளது. உடனடியாக உடைப்போம் என்று புறப்பட்ட பெளத்த தீவிர மதவாத சக்திகள் முஸ்லிம் தரப்பின் தீர்க்கமான நடவடிக்கை காரணமாக சற்று பின்வாங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அரசு உள்ளும் புறம்பும் அழுத்தங்களை பெற்று வருவதால் அதன் பிரதிபலிப்பு இனவாத சக்திகளின் தீர்மானத்தில் வெளிப்பட்டுள்ளது, பின்வாங்கியதன் விளைவுதான் சில முஸ்லிம் அரசியல் வாதிகளை பேச்சுக்கு அழைத்து பேசியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். முஸ்லிம் தரப்பு ஒற்றுமையாக மேற்கொண்ட தீர்மானம் சரியாக வேலைசெய்யத் தொடங்கியுள்ளதை இது காட்டுகிறது .

இந்த நிலையில் முஸ்லிம்கள் ஒன்றுமையாக மஸ்ஜிதின் இருப்பு தொடர்பான அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் வழிகாட்டலில் செயல்படவேண்டும் சொந்த அரசியல் இலாபங்களுக்காக பிரிந்து நின்று வேறுவிதமாக பிரச்சினையை அணுக முற்படுவது மிகவும் பாதகமான முடிவை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தம்புள்ள மஸ்ஜித் என்பது முழு முஸ்லிம்களுக்கும் சொந்தமானது அது மட்டுமின்றி அது அரசியல் என்பதற்கு அப்பால் இஸ்லாமிய வழிகாட்டலின் பிரகாரம் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினையாகும் இதை சில வேறுவிதமாக கையாள முற்படுவது மிகவும் பாரதூரமான விளைவுகளை சமூகத்திற்கு ஏற்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் .

மஸ்ஜிதை அகற்ற வேண்டும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு சில முஸ்லிம் அரசியல் வாதிகளும் ஆதரவு தந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து சிரேஷ்ட அமைச்சர் பௌசி ஆளுனர் அலவி மௌலானா ஆகியோர் தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன் ஆளுனர் அலவி மௌலானா இந்த செய்தியானது உலக முஸ்லிம் நாடுகளை ஏமாற்றும் சூழ்ச்சிகர நடவடிக்கை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பெரும்பாலான முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மஸ்ஜிதை அகற்ற முற்படும் அறிவிப்பை மிகவும் காட்டமாக எதிர்த்து வருகின்றனர்.

இன்று பிரதமர் கூட அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் தலைவருடன் தொடர்பு கொண்டு தான் முஸ்லிம் சமூகத்துடன் மிகவும் நெருக்கமானவர் என்ற அவரின் வரலாற்றை கூறியுள்ளார் .அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் வழிகாட்டலில் செயல்பட தீர்மானம் மேற்கொண்டுள்ளமையானது. இனவாத தரப்பை சற்று ஆட்டம் கான செய்துள்ளது. அதன் இன்றையா தீர்மானம் அது உள்ளக அழுத்தங்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது என்பதைத்தான் காட்டுகிறது .

தற்போது பல முஸ்லிம் நாட்டு தூதரங்கள் இந்த விடயம் தொடர்பாக கூர்மையாக அவதானித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பிரச்சினை சர்வதேச கவனத்தை பெற்று வரும் நிலையில் முஸ்லிம் தரப்பு ஒரு குரலில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் வழிகாட்டலில் தொடந்தும் பயணிக்கவேண்டும் . ஓவ்வொரு அரசியல்வாதியும் தனியாக தீர்வுகளை நோக்கி பயணிக்க முற்படுவதை முற்றாக தவிர்த்து கொள்ளவது முஸ்லிம் சமூகத்திற்கும் செய்யும் மிகப் பெரிய உபகாரமாகும்.

முஸ்லிம் அரசியல் தரப்பு நேற்று முன்தினம் இடம்பெற்ற ஜம்இயதுல் உலமாவின் தீர்மாங்களை தொடராக செயல்படுத்த வேண்டும் . இந்த விடயத்தை ஜனாதிபதி மூலம் தீர்வை பெற்றுகொள்வதுதான் மிகவும் பொருத்தமானது. இன்று பேரினவாத அடக்கு முறைக்கு அடிபணித்து விட்டால் நாட்டில் இன்னும் பல மஸ்ஜித்துக்களை அகற்ற அடக்குமுறை சாதாரன அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையாகி விடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் .

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 இல் 8:50 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

21 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Weldon ACJU , also advice cader to co-operate with acju

    aa

    ஏப்ரல் 23, 2012 at 9:19 பிப

  2. அட பாவமே அநியாயத்துக்கு இப்படி அடங்கி வாசிக்கிறாரு ரங்கிரி …. தேரர்??? எல்லாம் ஊடகங்கள் செய்த விணை ….இரு நாள் அவகாசம் கொடுத்து இல்லையேல் உடைதெறிவோம் என வீராப்பு பேசியவர்கள் இபோது 3மாசம் காத்திருக்க போறாகலோ இவக காத்திருந்தாலும் காத்திருக்காவிட்டாலும் அல்லாஹ்வின் பள்ளி அதே இடத்தில் நிலைதிருப்பதை உறுதிசெய்வது மானமுள்ள ஒவ்வொறு முஸ்லிமின் கடமை கொஞ்சநேரம் ஒற்றுமையாக ஸ்ரீலங்காவின் இரு மில்லியன் முஸ்லிம்கள் செயலாற்றியதட்கே இரு நாள் ஆறுமாதம் ஆக மாறிவிட்டதெனில் முஸ்லிம் சமூகத்தின் தொடர்ச்சியான வீரியமும் விவேகமும் உள்ள செயலாற்றல் கண்டிப்பாக எல்லா வஞ்சகத்தையும் உடைதெறிந்து விடும் அதட்கு தேவையானது எங்கேயும் எப்போதும் ஒற்றுமையாக செயலாற்றலும் சர்வதேசத்துடனும் சவதேச முஸ்லிம் உம்மாவுடனும் தொடர்ச்சியான விழிபூட்டல் தொடர்புகளை திடமாக பேனுவதுமாகும் முக்கியமும் முதன்மையுமாக எல்லா நேர தொழுகையிலும் அல்லாஹ்விடம் உதவிதேடி இறைஞ்சலுமாகும்

    Mohammed Hiraz

    ஏப்ரல் 23, 2012 at 9:55 பிப

    • yes.கொஞ்சநேரம் ஒற்றுமையாக ஸ்ரீலங்காவின் இரு மில்லியன் முஸ்லிம்கள் செயலாற்றியதட்கே இரு நாள் ஆறுமாதம் ஆக மாறிவிட்டதெனில்

      analyser

      ஏப்ரல் 24, 2012 at 7:33 முப

    • “கொஞ்சநேரம் ஒற்றுமையாக ஸ்ரீலங்காவின் இரு மில்லியன் முஸ்லிம்கள் செயலாற்றியதட்கே” I love to hear with tear this comment again & again. Jazakallahu Khaira Brother 4 ur Comment.

      Ayan

      ஏப்ரல் 24, 2012 at 2:00 பிப

    • Jezakallahu khair brother, Your words gives us strong belief to being Muslim. yes, Insha Allah we are heading soon to rise of Islamm Rule. ……………………………………………………………………………………….

      Mohamed Iflal

      ஏப்ரல் 25, 2012 at 3:28 பிப

  3. ஒற்றுமையே பலம் அரசியல்வாதிகளே உங்களின் சுய விளம்பரங்களை மேற்கொள்ள தனியாக முயற்சிகளை செய்து சமூகத்தை ஆபத்தில் மாட்டிவிடாதீர்கள் ACJU தலைமயில் பயணிப்போம்

    NewsMan

    ஏப்ரல் 23, 2012 at 10:00 பிப

  4. ஜமியதுல் உலமா தனது முயற்சியை தொடரவேண்டும் வெற்றிவரை செல்லவேண்டும் எது நீதியும் நியாயமுமோ அதுவே எமக்கு வெற்றி

    Fowser _UK

    ஏப்ரல் 23, 2012 at 10:05 பிப

  5. Alhamdulillah unity is Victory ACJU go forwad….

    Haffi -

    ஏப்ரல் 23, 2012 at 10:06 பிப

  6. well done AJUM and Muslim counries who questioned on the matter

    Umar Farook

    ஏப்ரல் 23, 2012 at 10:09 பிப

  7. Not only that we have to thanks our sinhala community brothrs/sisters who are stand with us.

    Mohammed Rizvi Uvais

    ஏப்ரல் 23, 2012 at 10:56 பிப

  8. ALLAHU AKBAR ALLAHU AKBAR ALLAHU AKBAR thanks for acju and sinhala community brothrs/sisters who are stand with us.

    shihar

    ஏப்ரல் 24, 2012 at 1:21 முப

  9. We must bear in mind that one of the reasons for getting positive results has been that Muslim community stood as one, under the leadership of ACJU, with politicians also supporting the stand. Alhamdu lillah. We must however desist from tarring the entire Sinhala community with the same brush . it has been a minority of extremists and racists including some monks ( even Sinhalese say that these breed of monks are a shame on Buddhism) who have been responsible for these disgraceful behaviour . We must work with the majority Sinhalese who have been living with Muslims peacefully for centuries to alienate these racist elements. Unity of our ummah is also important

    Lukman Harees

    ஏப்ரல் 24, 2012 at 3:01 முப

  10. இலங்கை முஸ்லிம்கள்; செய்ய வேண்டியது என்ன?

    1. உலமா சபையின் கீழ் ஒன்று படுவோம்
    2. கட்சி சார்பின்றி குர்ஆன் ஹதீஸ்படி பிரச்சினைகளைத் தீர்ப்போம்
    3. சத்தியத்தை ஏவி அசத்தியத்தைத் தடுப்போம்
    4. நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்வோம்

    Abdullah

    ஏப்ரல் 24, 2012 at 4:27 முப

  11. Alhamthulillah …Thanks for update

    Khalid Bin Waleed

    ஏப்ரல் 24, 2012 at 7:55 முப

  12. Al – hamdulillah

    Ruwaiz NZ

    ஏப்ரல் 24, 2012 at 8:06 முப

  13. Guys! They back only 3 months and don’t be rest

    Mohammed

    ஏப்ரல் 24, 2012 at 10:33 முப

  14. Alhamdu Lillah…… we should unity with ACJU apart from the political personal advance

    Mohamed Imthiyas

    ஏப்ரல் 24, 2012 at 10:51 முப

  15. ……..அவன் அரசியல் சுயனலத்திக்காக தனிப்பட்ட ரீதியில் நேற்று மகா நாஹிமியை சந்தித்து உள்ளான். பேச்சுவார்த்தை ஒன்று எனின் அது உலமா சபை மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கொண்டதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட பயணங்களை தடுக்க உலமா சபை முன்வர வேண்டும். இல்லையேல் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் நம்மை விற்று விடுவார்கள்.

    Fasly

    ஏப்ரல் 24, 2012 at 11:22 முப

  16. ALHAMDULILLAH ACJU, WEL DONE.
    ALL ARE OK, BUT ONLY ONE DEPUTY MINISTER STRUGGLING SO MUCH, EVEN HE IS MEETING SO CALLED MONK IN DAMBULLA TEMPLE.
    NO ONE AUTHORIZED HIM TO DO SO, EVEN HE IS ACTING AGAINST THE DECISION OF ACJU.
    …………………
    ………………………….
    YA ALLAH TEACH GOOD LESSON TO HIPPOCRATES.
    AAMEEN.

    BADOOD

    ஏப்ரல் 24, 2012 at 1:17 பிப

  17. ALLAHU AKBER…. ALLAHU AKBER…..ALLAHU AKBER

    Rinas kamlunai

    ஏப்ரல் 24, 2012 at 5:06 பிப

  18. I kindly request all our Muslim brothers and sisters to read “QUNOOTH” after each five time prayers
    including “Sunnah” prayers and ask “Dua” from Almighty Allah to save our Mosque in Dambulla and all
    the other places.Almighty Allah is ready and waiting to answer to our “Dua”s.

    Abdul Aziz

    ஏப்ரல் 25, 2012 at 10:16 முப


பின்னூட்டமொன்றை இடுக