Lankamuslim.org

தம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்

with 4 comments

தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பில் நேற்று இரண்டு விதமான தகவல்கள் வெளியாகியுள்ளன . இந்த இரண்டு தீர்மானத்துடனும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தொடர்பு படவில்லை என்பது குறிப்பிடதக்கது .ஒன்று வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்களும் அகற்றப்படும் என்று மற்ற அறிவிப்பில் முஸ்லிம்கள் மூன்று மாத காலங்களுக்கு பள்ளியை பயன்படுத்தலாம் என்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தன்புள்ள இனாமலுவ மகா நாயக்க தேரரை தெரிவித்தார் என்ற செய்தியுமாகும்

முதல் தீர்மானதிற்கான கூட்டம் புத்த சாசன அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் தம்புள்ளை ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர் ஆகியோர் கலந்துகொள்ள , தம்புள்ளை நகரில் உள்ள ரஜமஹா விகாரையின் புனிதப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்று தீர்மானம் எடுக்கப்பட்டது .இதனால் வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்களும் அகற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதாக இனாமலுவே சுமங்கள தேரர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இரண்டாவது அறிவிப்பு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தரப்பில் இருந்து வெளிவந்தது. பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரச்சினைகளுடன் தொடர்பு படுத்தி பேசப்படும் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் பெரேராவுடன் இனாமலுவ மகா நாயக்க தேரரை சந்தித்து பேசியுள்ளனர் அவர்களுடன் மாத்தளை மாநகர சபை மேயர் ஹில்மி கரீம் சென்றுள்ளார். இனாமலுவ மகா நாயக்க தேரரை சந்தித்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேரர் மூன்று மாதங்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இன்றி குறித்த பள்ளிவாசலில் சமய அனுஷ்டானங்களை பிரதேச மக்கள் வழமை போன்று நிரைவேற்ற முடியுமென உறுதி மொழி வழங்கினார் என்று பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்துள்ளார் .

மேற்கண்ட இரண்டு முரண்பட்ட தகவல்கள் நேற்று வெளியாகின , அகில இலங்கை ஜம்இயதுல் உலமா ஜாதிபதியையும் , பிரதமரையும் தம்புள்ள மஸ்ஜித் தொடர்பாக பேசுவது என்றும் நேற்று இடம்பெற்ற  கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்றும் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. இதேவேளை நேற்று தம்புள்ள சென்ற பிரதியமிச்சர் ஹிஸ்புல்லாவிடம் இந்த பிரச்சினையை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தான் கையாளவேண்டும் என்ற நிலைபாட்டில் இருக்கும் பள்ளி நிர்வாகம் தாம் கூட்டத்திற்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர் . அதேவேளை இனாமலுவ மகா நாயக்க தேரர்  சந்திப்பின் போது பௌத்தர்களால் தம்புள்ள பள்ளிவாயலுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக லங்கா தீப செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி முஸ்லிம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வாறான உண்மைக்கு முரணான கருத்துக்களை தெரிவிதிருந்திருந்தால் உடனடியாக அவர் எதார்த்தத்தை விளங்கிக் கொன்று தனது அறிவிப்பை சரி செய்து கொண்டு மீள் அறிவிப்பை விடவேண்டும் அல்லது ஊடக செய்தி தவறாக கூறியதாக இருந்தால் அதற்கு மறுப்பு அறிக்கை மூன்று மொழிகளிலும் வெளியிடவேண்டும்.

முஸ்லிம் சமூகம் ஒன்றுமையாக ஜம்இயதுல் உலமாவின் வழிகாட்டலில் சமாதானமாக பேசுக்கள் மூலம் தீர்வுக்கான எல்லா அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் , தம்புள்ள மஸ்ஜித் விவகாரம் அந்த பள்ளி நிர்வாகிகளும் , அந்த பிரதேசத்தில் உள்ள மக்களும் மட்டும் கையாள முடியுமான பிரச்சினை அல்ல ஆகவே அரசியல்வாதிகள் இந்த விடயத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டும் .

ஜம்இயதுல் உலமா தான் மேற்கொண்ட தீர்மானத்தில் குறித்த பிரச்சினையை கையாள்வதில் தொடர்ந்து உறுதியாக செயலபடும் என்று தெரிவிக்கின்றது . இனி வரப்போகும் காலப்பகுதி முஸ்லிம் சமூகத்தின் ஒன்றுமைக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தும் காலமாக அமையலாம் , ஊடக போலி அறிக்கை மூலம் மஸ்ஜிதை அகற்ற திட்டமிட்ட சக்திகள் முஸ்லிம் அரசியல் வாதிகளை பிளவு படுத்தி தீர்வு தொடர்பான பல கருத்துக்களை முஸ்லிம் தரப்பில் உருவாக்கி சில குறித்த முஸ்லிம் சாராருடன் கலந்துரையாடல்களையும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி அதுதான் முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த முடிவாக காட்டி தாம் நினைத்தவற்றை அடைந்து விட முற்படலாம் . சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடந்த கால நடவடிக்கைகளை திருப்பதி கரமாக நோக்க முடியாது உள்ளது .அகவே இந்த விடயத்தில் பிரதியமைச்சர் , அமைச்சர் ,பாராளுமன்ற உறுப்பினர் , நகர மேயர் என்ன சொல்கிறார் என்பது முக்கியமல்ல அகில இலங்கை ஜம்இயதுல் உலமா என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியமானது . அதுதான் முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த குரலாகவும் இருக்கமுடியும் .

அதேவேளை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா பல விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் மஸ்ஜித் பிரச்சினை தொடர்பிலான தெளிவான இஸ்லாமிய அணுகுமுறையை வெளிபடுத்த வேண்டும் .அந்த அணுகுமுறை இஸ்லாமிய நேரடி சட்டம் , நாட்டில் உள்ள சட்டம் , நாட்டின் சமூக நீதி, மரபு , வழக்காறு , மற்றும் இது தொடர்பான வரலாற்று பதிவுகள் என்பனவற்றை கருத்தில் கொண்டு விரிவாக பிரச்சினையை அணுகவேண்டும். அப்படி வெளிப்படும் தீர்மானம் இந்த பிரச்சினை தொடர்பாக தெளிவான மயக்கமற்ற ஒரு நிலைபாட்டை கொண்டிருக்கவேண்டும் என்பதுதான் இன்று முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பு.

மஸ்ஜித் தொடர்பில் அதிகமான சிங்கள மக்களும் சில சிங்கள அரசியல்வாதிகளும் தமது ஆதரை மஸ்ஜிதின் இருப்புக்கு தெரிவித்து வருகின்றனர். இவர்களுடனும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் அது ஆரோக்கியமான நகர்வுகளுக்கு வழிவகுக்கும்

நாம் எடுக்கபோகும் தீர்மானம் பல சாதகமான ,பாதகமான விளைவுகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் உருவாகும் ஊக்குவிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்வது சிறந்தது . அப்படி எடுக்கப்படும் தீர்மானதிற்கு முழு சமூகமும் தமது விசுவாசத்தை வழங்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைதான் எமக்கு நீதியை பெற்றுத்தரும் தவறினால் நீதி என்ற லேபிளில் மிக மோசமான அடக்கு முறையை பெற்றுகொள்ளவேண்டிய இழிவுக்கு முஸ்லிம் சமூகம் ஆளாகநேரிடும்

தமக்கு சாதகமான தீர்வு கிடைக்கா விட்டால் இன்று பள்ளியை உடைப்போம் என்று தெரிவித்திருந்த இனவாத தரப்பு 3மாதங்கள் காலக் கெடுவை முன்வைத்து சற்று பின்வாங்கியுள்ளது . உடனடியாக உடைப்போம் என்று புறப்பட்ட பெளத்த தீவிர மதவாத சக்திகள் முஸ்லிம் தரப்பின் தீர்க்கமான நடவடிக்கை காரணமாக சற்று பின்வாங்கியுள்ளது. என்பதில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் .

Written by lankamuslim

ஏப்ரல் 24, 2012 இல் 4:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Better if can reach and discuss with Asgiriya & Malwather Chapters…………T

    Mohammed

    ஏப்ரல் 24, 2012 at 4:15 பிப

  2. Do not warry Mohammed ACJU would decide on it

    Rafeek

    ஏப்ரல் 24, 2012 at 4:21 பிப

  3. we are with ACJU

    bunanm

    ஏப்ரல் 24, 2012 at 5:07 பிப

    • who is the hiss bulla….. nadantha mahaana sabai therthalin poathu CM pathawikkaga katchi maari eymaantha pulli thaaniwar.

      sakeena a raheem.

      ஏப்ரல் 24, 2012 at 10:18 பிப


பின்னூட்டமொன்றை இடுக