Lankamuslim.org

ஜமிய்யத்துல் உலமாவின் தீர்மானத்தை அமுல்படுத்த முழு அரசியல் பலத்தையும் பிரயோகிப்போம் ..

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா, F.M.பர்ஹான்:  தம்புள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் சர்ச்சை தொடர்பாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கடந்த ஞாயிற்றுக் கிழமை கட்சியின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் கூடி விரிவாக ஆராய்ந்ததுடன்,தீர்மானங்கள் சிலவற்றையும் எடுத்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளர்.

அன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயலாளர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.அவை பின்வருமாறு –

தம்புள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அகில .இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வண்மையாக கண்டிப்பதென்றும்,தொடுக்கப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படல் வேண்டும்.

தம்புள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய மார்க்க அதி உயர் பீடமான அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை எடுக்கின்ற தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு தமது முழு அரசியல் பலத்தையும் பிரயோகிப்பது என்றும்,அதனை முன்னெடுப்பதற்கு வகிக்கும் பதவிகள் தடையாக இருக்குமெனில்,அப்பதவிகளை துரப்பது, என்றும்.

அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சரியாக முஸ்லிம் சமூகத்தை வலி நடத்தியதுடன், முஸ்லிம்களின் எதிர்ப்பை இலங்கையிலும், சர்வதேசத்திலும் வெளிப்படுத்தியமைக்கு கட்சியின் நன்றிகளை தெரிவிப்பதுடன், அரசியல் உள்நோக்கம் கொண்ட சில சக்திகள் ஜமிய்யத்துல் உலமாவை பிளவுபடுத்தி தங்களது அரசியல் இலக்குகளை அடைய எடுக்கும் முயற்சிகளை வண்மையாக கண்டிப்பது,

இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களது மத வழிபாடுகளை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தி கூறி,முஸ்லிம்களது தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் நியாயமான முறையில் செயற்பட்ட காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களுக்கும்,ஏனைய அரசியல் தலைவர்களுக்கும்,மதப் பெரியார்களுக்கும்,  எமது நியாயத்தை ஏற்றுக் கொண்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் சகோதரர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பது என்ற தீர்மானமும் இந்த கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மேலும் கூறினார்.

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2012 இல் 5:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக