Lankamuslim.org

முஸ்லிம்களின் பாதுகாப்பு : இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிடம் உத்தரவாதம் வழங்கியுள்ள மஹிந்த

with 3 comments

mahinM.ரிஸ்னி முஹம்மட்: இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைபான இஸ்லாமிய ஒத்துழைப்பு (The Organization of Islamic Cooperation (OIC)) அமைப்பின் செயலாளரை இன்று  நியூயோர்க்கில் சந்தித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை

முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் அந்த அமைப்புக்கு உத்தரவாதம் ஒன்றை வழங்கியுள்ளார் என அறிய முடிகிறது .

இன்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர்  அயாத் அமீன் மதனிக்கும் , ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் இன்று  நியூயோர்க்கில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது . இந்த சந்திப்பில்   இலங்கையில்  முஸ்லிம்களுக்கு எதிரான அதிகரித்துவரும் சூழ்நிலை குறித்து தனது கவலையை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர்  ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார் . இதன்போது ஜனாதிபதி மஹிந்த முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான எந்த சம்பவத்தையும் கையாள உடனடியாக நடவடிக்கை எடுக்கப்டும் என உறுதி வழங்கியுள்ளார் .

இந்த நிலையில்  ‘எனது சொந்த சகோதர்களை பார்த்து கொள்வதுபோன்று முஸ்லிம் சமூகத்தை பார்த்து கொள்வேன்’ என ஜனாதிபதி மஹிந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர்  அயாத் அமீன் மதனியிடம் உறுதிமொழி வழங்கியதாககவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேவேளை இலங்கைக்கு வந்து நாட்டின் நிலைமைகளை நேரில் காணுமாறு மஹிந்த ராஜபக்ஷ இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளருக்கு அழைப்பு விடுத்துள்ளார் .

உலகில் ஐநாவுக்கு அடுத்து பெரிய அமைப்பாக கருதப்படும்  57 முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் தனது கவனத்தை இதற்கு முன்னர் இரு தடவைகள் வெளிப்படுத்தியுள்ளது.

இங்கையில்  சட்டத்தின் ஆட்சியை அமுல் படுத்தி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) அரசாங்கத்தை கோரியுள்ளது . முஸ்லிம்களுக்கு எதிரான தென் இலங்கையில்ஏற்பட்டுள்ள தற்போதிய சூழ்நிலை தொடர்பில் ஆழ்ந்த   கவலையை அது வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச்  மாதம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு- இலங்கையில் அதிகரித்து வரும் இனவாதம் குறித்து தனது  கவலையை அரசாங்கதுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2014 இல் 7:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. “””இலங்கைக்கு வந்து நாட்டின் நிலைமைகளை நேரில் காணுமாறு மஹிந்த ராஜபக்ஷ இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளருக்கு அழைப்பு விடுத்துள்ளார் .'””

    ஆமாமா…..இலங்கைக்கு வந்து அஸ்வர்,பவுஸி போன்ற பெருந்தலைவர்களை சந்தித்தாரென்றால் இலங்கை முஸ்லிமகளது வாழ்வில் தேனாறும் பாலாறும் பாய்ந்தோடும் செய்தியை தெரியப்படுத்துவார்கள்

    Roshaen

    செப்ரெம்பர் 25, 2014 at 10:43 பிப

  2. ஆக, இதுவரை அவ்வாறு நடக்கவில்லை என்பதை தெளிவாக (மறைமுகமாக) வெளிப்படுத்தியுள்ளார். அதோடு இவ்வாறான பொய்களை ஏற்கனவே பல வெளிநாட்டுத்தலைமைகளுக்கு சொல்லியிருந்தும் அவ்வாறு சொல்லியபடி நடக்கவில்லை என்பதையும் இங்கு உறுதிப்படுத்தியுள்ளார். எனவே ஒரு நாட்டுத்தலைவர் தனது மக்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார், வெளிநாட்டுமக்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்…. இதற்கு தண்டனை என்ன????

    Iam srilankan muslim

    செப்ரெம்பர் 26, 2014 at 10:53 முப


பின்னூட்டமொன்றை இடுக