Lankamuslim.org

ஹிஜாபுக்கு தடையா, போட்டிகளில் இருந்து வெளியேறிய கத்தார் வீராங்கனைகள்

leave a comment »

hijabதென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப்பந்து அணியினர் போட்டிகளின் போது இஸ்லாமிய முறைப்படி அணியும் ஹிஜாப் உடையை

  அகற்றுமாறு கோரப்பட்டதை அடுத்து போட்டிகளிலிருந்து விலகி சென்றுள்ளனர்

ஹிஜாப்  அங்கியை அவர்கள் மங்கோலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது அகற்றுமாறு கோரப்பட்டனர். அவர்கள் அதைச் செய்ய மறுத்து இந்தப் போட்டியில் கலந்துகொள்ளாமல் விலகி சென்றுள்ளனர்.    உலகக் கூடைப்பந்து விதிகள் இதுபோன்ற தலை அங்கிகளை அணிவதற்கு  இந்த விதியைத் தளர்த்த வேண்டுமா என்பது குறித்து இந்த விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பு பரிசீலித்துக்கொண்டிருக்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடப்படும் மற்ற விளையாட்டுகளில் இந்த ஹிஜாப் அணிவது தடை செய்யப்படவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.

hijab 2

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2014 இல் 6:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக