Lankamuslim.org

பாதுகாப்பு அமைச்சுக்கு 28502 கோடி சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு 5750 கோடி நிதி

leave a comment »

ministry_of_defence2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தை பிரதமர் டி.எம். ஜயரட்ன நேற்று பாரா ளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கிணங்க 2015 ஆம் ஆண்டுக்கான செலவினமாக ஒரு இலட்சத்து 81229 கோடியே 87 இலட்சத்து 18000 ரூபா

ஒதுக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கான செலவினமாக ஒரு இலட்சத்து 59825 கோடியே இருபத்தைந்து இலட்சத்து 18000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாயினும் 2015 ஆம் ஆண்டிற்கான செலவினமாக 21404 கோடியே 62 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான செலவினம் 2015 ஆம் ஆண்டுக்காக 28502 கோடியே இருபது இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதி செலவினமாக 2015 ஆம் ஆண்டிற்கு 1970 கோடியே 33 இலட்சத்து இருபதி னாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு 2015 ஆம் ஆண்டுக்காக 5750 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டி.எம். ஜயரட்னவினால் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்திற்கிணங்க முக்கிய அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட செலவினம் கீழ் வருமாறு :

நிதியமைச்சுக்கான 2015 ஆம் ஆண்டுக்கான செலவினம் 18092 கோடியே ஐம்பது இலட்சமாகும். பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 11,300 கோடியும் சுகாதார அமைச்சுக்கு 13949 கோடியே 49 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 2014 ஆம்

வருடத்தை விட 282 கோடியே 52 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா குறைவாகவும் சுகாதார அமைச்சுக்கு 2014 ஒதுக்கீட்டைவிட 626 கோடியே 79 இலட்சத்து 33 ஆயிரம் ரூபா அதிகமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, போக்குவரத்து அமைச்சுக்கு 7565 கோடியே 80 இலட்சம் ரூபாவும் மின்வலு எரிசக்தி அமைச்சுக்கு 24 கோடியே 32 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவும், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கு 208 கோடி ரூபாவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு 15371 கோடியே 60 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சுக்கான நிதி கடந்த முறையை விட 455 கோடி ரூபா அதிகரிக்கப்பட்டு 4760 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மாகாண சபைகளுக்கான நிதியும் கடந்த வருடத்தை விட 8124 கோடியே 29 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 23468 கோடியே 66 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபைக்கு 2014 ஆம் ஆண்டில் 1745 கோடியே 30 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த போதும் 2015 ஆம் ஆண்டுக்காக 295 கோடியே 78 இலட்சம் அதிகரிக்கப்பட்டு 2041 கோடியே 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கிழக்கு மாகாண சபைக்கு 2014 ற்காக 1617 கோடியே 80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த போதும் 2015 ஆம் ஆண்டுக்காக 317 கோடியே 53 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா அதிகரிக்கப்பட்டு 1935 கோடியே 33 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத்துறை கைத்தொழில் அமைச்சுக்கு 461 கோடியே 60 இலட்சம் ரூபாவும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு 37 கோடியே 80 இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாவும் உயர் கல்வியமைச்சுக்கு 4110 கோடி ரூபாவும் 2015 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிவில் விமான போக்கு வரத்து அமைச்சுக்கு 1417 கோடியே 30 இலட்சம் ரூபாவும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சுக்கு 5750 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. (ஸ)

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 இல் 8:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக