Lankamuslim.org

OIC அமைப்பின் செயலாளர் இலங்கை வரமுன்னர் அவரின் அதிகாரிகள் வரவுள்ளனர்

leave a comment »

oicஇஸ்லாமிய நாடுகளின் கூட்டமைபான இஸ்லாமிய ஒத்துழைப்பு (The Organization of Islamic Cooperation (OIC)) அமைப்பின் செயலாளர் அயான்  மதானி இலங்கைக்கு விஜயம் செய்வார் என வூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரக

அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்ற  இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளருடனான சந்திப்பின்போது   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இலங்கைக்கு வியஜம் செய்யுமாறு  அவருக்கு    அழைப்பு விடுத்திருந்தார்

மதானியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக அவரது அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்து, விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளருக்கும் இடையிலான அண்மைய சந்திப்பின்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் மதனி ஜனாதிபதியிடன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஏனைய தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விஜயத்தின் போது, சிறுபான்மை சமூகங்களின் தற்போதைய நிலைமை குறித்து கவனம் செலத்துவார் குறிப்பிடப்படுகிறது.

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2014 இல் 1:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக