Lankamuslim.org

ஐ.நா.வின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம் அமைச்சர் மங்கள

leave a comment »

UNஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேர­வையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள யோச­னையின் பரிந்துரைகளை அர்ப்­ப­ணிப்­புடன் நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­ தாக அர­சாங்கம் நியூ­யோர்க்கில் தெரி­வித்து உறு­தி­ய­ளித்­துள்­ளது.

முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற யோச­னை­யா­னது எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் வெற்­றி­க­ர­மா­னது என்று கூற­வேண்டும். அத்­துடன் கடந்த பல வரு­டங்­க­ளாக ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேரவையி­லி­ருந்து இலங்­கை­யா­னது தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. எனினும் அத்­த­கைய நிலைமை தற்போது தகர்க்­கப்­பட்­டுள்­ளது என்றும் வெ ளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.

நியூ­யோர்க்கில் இடம்­பெற்ற பொது­ந­ல­வாய நாடு­களின் வெளி­யு­றவு அமைச்­சர்­களின் கூட்­டத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்

கடந்த பல வரு­டங்­க­ளாக இலங்­கையின் செயற்­பா­டுகள் கார­ண­மாக சர்­வ­தேச சமூகம் நாட்டை வெட்­கத்­திற்கு உள்­ளாகும் யோச­னை­களை முன்­வைத்­தது. 2012 ஆம் ஆண்டு முதல் இலங்­கைக்கு எதி­ரான யோச­னைகள் வெற்றி பெற்­ற­துடன் இலங்கை தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டது.

2009 ஆம் ஆண்டு மனித உரிமை பேர­வைக்குள் கொண்­டு­வ­ரப்­பட்ட யோச­னையில் இலங்கை அர­சாங்கம் வெற்­றி­பெற்ற போதிலும் பேர­வையில் முன்­வைக்­கப்­பட்ட இணக்­கப்­பா­டு­களை வெற்­றி­ய­டைய செய்ய தவ­றி­யதால், இலங்கை மக்கள் பெற்ற வெற்றி தோல்­வி­ய­டைந்­தது.

இதன் மூலம் 2012, 2013, 2014, ஆம் ஆண்­டு­களில் யோச­னைகள் கொண்டு வரு­வ­தற்­கான வழி­வகை ஏற்­பட்­ட­துடன் பேர­வையில் அங்கம் வகிக்கும் பெரும்­பா­லான நாடுகள் எதி­ராக மாறின. இதனால், நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் அவ­மா­னமும் அவ­ம­திப்பும் ஏற்­பட்­டது.

இதனால், பல தசாப்த கால­மாக சகல நாடு­க­ளுடன் இணக்­கத்­துடன் நடு­நி­லை­யா­கவும் நட்­பு­ற­வு­டனும் இருந்து, ஐக்­கிய நாடுகள் அமைப்பின் கௌர­வத்­துக்கு பாத்­தி­ர­மாக இருந்த நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் இந்த காலப் பகுதி அகௌ­ர­வ­மான கால­மாக மாறி­யது.

2009 ஆம் ஆண்டு மூன்று தசாப்த கால போர் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட போதிலும் மக்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய பலா­ப­லன்கள் கிடைக்­காமல் போனது. சுதந்­தி­ரமும், ஜன­நா­யக ரீதி­யான ஆட்­சியும் இல்லாம் போனது. சமா­தா­ன­மா­கவும் ஐக்­கி­ய­மாக வாழ வேண்டும் என்ற எமது நாட்டு மக்­களின் அபி­லாஷை அவர்­க­ளுக்கு இல்­லாமல் போனது.

நல்­லி­ணக்கம் மூலம் இனங்­க­ளுக்கு இடையில் ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தி நாட்டை கட்­டி­யெ­ழுப்ப கிடைக்க சந்­தர்ப்­பத்தை கைந­ழுவ விட்­டதால், நாடு சர்­வ­தே­சத்­திற்கு மத்­தியில் மேலும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டது.

2009 ஆம் ஆண்­டுக்கு பின்னர் மனித உரிமை குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிப்­ப­தற்கு பதி­லாக மௌனம் சாதிக்­கப்­பட்­டது. இதன் கார­ண­மாக நாடு சர்­வ­தேச அர்த்­தப்­ப­டுத்­தல்­க­ளையும் விசா­ர­ணை­க­ளையும் எதிர்­நோக்­கி­யது.

இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் திடசங்கர்ப்பமான முயற்சியின் பலனாக இலங்கைக்கு மீண்டும் சர்வதேசத்தின் பெறுமதியான மதிப்பு கிடைத்துள்ளது.

உலகத்தின் பெறுமதியை மதிக்கும், பொறுப்பு , நம்பிக்கை மற்றும் சமாதானமான நாடாக இலங்கை மீண்டும் சர்வதேசத்துடன் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.-vk

Written by lankamuslim

செப்ரெம்பர் 26, 2015 இல் 5:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக