Lankamuslim.org

பள்ளிவாலை மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை

leave a comment »

பிரதமர் தலைமையில் கண்டி கம்பளையில் நடந்த கலந்துரையாடலில் நான் கலந்துகொள்ளவுமில்லை பள்ளிவாலை மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுமில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்று மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:- -எல்லா இனத்தவரும் இன, மத பேதமின்றி ஒருவருக்கொருவர் ஒத்துழைப்போடு இன ஐக்கியத்தை பேணி பாதுகாத்ததுடன், இனரீதியான உரிமைகளை பேணு வதில் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டுள்ள வேலையில் தம்புள்ளை சம்பவமானது என்னை துயரல் ஆழ்த்தியுள்ளது.

தம்புள்ளை பள்ளிவால் அகற்றுதல் தொடர்பில் பல பத்திகைகளில் செய்திகள் வெளியாகின 2012.04.22 ஆம் திகதி கம்பளையில் நடந்த பிரதமருடனான சந்திப்பில் நான் கலந்துகொண்டதாகவும் அதன் போது பள்ளிவாலை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான யோனைக்கு இணங் கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நானோ கம்பளையில் நடந்த பிரதமருடனான கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுமில்லை அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்தழைப்பு வழங்கவு மில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் .

ஏனைய மதத்தினருடன் மாதானமாக சக வாழ்வுடன் வாழும் முறையை போதித் புத்தபெருமான் இவ்வாறான நடவடிக்கைகளை என்றும் அனுமதித்ததில்லை-.

முஸ்லிம் நாட்டுகள் அனைத்தும் எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பல்வேறு விதங்களில் உதவி புரிந்துள்ளன. எமது நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான கனிப்பொருள் விநியோகம் , தேயிலையை கொள்வனவு செய்தல் போன்ற பல்வேறு வழிகளில் சிறந்த முறையில் பங்களிப்புச் செய்துவருகின்ற வேளையில், ஜெனீவா மாநாட்டில் கூட இலங்கை அரக்குச் சார்பாகவே வாக்களித்தன.

அத்தோடு , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பக்கபலமாகவும் இருந்துவருகின்றன. இந்நிலையில், இச்ம்பவமானது உலக முஸ்லிம் நாட்டுகளிடையே தப்பான எண்ணத்தைத் தோற்றுவித்து, அரசைசிக்கல் நிலைக்குள் தள்ளும் ஒரு முயற்சியாகவே அமையும் எனநான் கருதுகின்கிறேன்

Written by lankamuslim

ஏப்ரல் 24, 2012 இல் 12:26 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக